இலங்கை கல்வி முறைமையில் மாற்றத்தை வலியுறுத்தும் கொவிட் – 19

0
239
இலங்கையில் கல்வி

இலங்கையில் கல்வி: கொவிட் – 19 காரணமாக இலங்கையிலுள்ள பாடசாலைகள் திடீரென மூடப்பட்டமையானது மாணவர்களுடைய கற்றல் தொடர்பிலான ஒரு அனர்த்த நிலையை ஏற்படுத்தியதாக அமைந்தது.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

இது உலகளாவிய ரீதியில் நோக்கும் போது பொதுவானதொரு நிகழ்வாயினும் இலங்கையினைப் போன்றதொரு அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் இது ஒரு கல்வி சார் அனர்த்த நிலையாகவே காணப்படுகின்றது.

இந்நிலை காரணமாக பாரம்பரிய கற்றல் கற்பித்தலில் ஈடுபட்ட கல்விச் சமூகமானது தமது கற்றல் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டியதொரு கட்டாயமான சூழலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இணையவழிக் கற்றல் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்வி உபாயங்களுக்கு இலங்கை கல்வித் துறை மாறியது.

அதுமட்டுமன்றி இலங்கை அரசானது தரம் – 05 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொலைக்காட்சி வழியிலான கற்பித்தல்களையும் ஒலிபரப்பு செய்தது.

இருப்பினும், பாடசாலைகள் தொலைதூர கற்றல் முறைக்கு இன்னமும் தயாராகவில்லை.

எனவே இவ்வாறான புது முயற்சிகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டியதான மிக அவசரமானதொரு விடயமாக உள்ளது.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019

கொவிட் – 19 ஆனது விரைவில் தீர்கப்படாதுவிடில் அல்லது இந் நோய்நிலமையின் அடுத்தடுத்த அலைகள் காரணமாக இந்நோயின் தீவிரத் தன்மை அதிகரிப்பின் இவ் இணையவழி அல்லது தொலைதூரக் கல்வி முறைமைக்கான நீண்டகால தீர்வொன்று இலங்கை கல்வி முறைமைக்கு அவசியமாகின்றது.

School Closed

இலங்கையின் இணையப் பாவனை பற்றிய தரவுகளை நோக்கும் போது மத்தியவங்கி ஆண்டறிக்கை 2019 இன் படி 1000 பேருக்கு 61.5 பேர் உள்ளதாக குறிப்பிடுகின்றது. அதேவேளை உலக வங்கியின் (The World Bank) தரவுகளின் படி இலஙகையின் இணையப்பாவனை மக்கள் தொகையானது 2019 இல் 34.11% ஆகவுள்ளது.

அதேவேளை இன்னுமொரு ஆய்வொன்று இணையப்பாவனை உள்ள மாணவர்களில் 40% ஆனவர்கள் மட்டுமே மொபைல் அப்பிளிகேஷன்களான வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றவற்றைப் பயன்படுத்தி தமக்கான பாடக் குறிப்புக்களைப் பெற்றுக்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

இவ்வாறான மாணவர்களின் இணைப்பாவனைக்கான மூலமாக ஸ்மார்ட் போன்களே காணப்படுகின்றன.

இவை ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கோ பொதுவானதொன்றாக காணப்படுகின்றது.

அதுவும் பெற்றோர் அல்லது வளர்ந்தவர்களின் மேற்பார்வை இன்றியே பெரும்பாலான பிள்ளைகளின் இவ் இணையம் ஊடான கற்றல் இடம்பெறுகின்றது.

இவ்வாறு கற்றல் செயற்பாட்டின் போது பாடக்குறிப்புக்கள் பெருமளவில் பல்வேறு ஆசிரியர்களால் வேறுபட்ட பாடங்களுக்கு அனுப்பப்படும் போது பிள்ளைகளினால் குறித்த பாடக்குறிப்புக்களை உரிய வகையில் பயன்படுத்துவது சவாலானதொன்றாகி விடுகின்றது.

READ  புதிய தேசிய கல்விக் கொள்கை

இது இணையப் பாவனை உள்ள 40% மாணவர்களின் பிரச்சனையாக இருக்கும் போது 60% ஆன மாணவர்களுக்கு இணையப்பாவனைக்கான வசதியின்மை காரணமாக எவ்வித பாடக்குறிப்புக்களும் சென்றடைவதில்லை என்பது இணையவழிக் கற்றலின் அல்லது தொலைதூரக் கற்றலின் பெரும் சவாலானதொரு அல்லது தோல்விக்கான காரணமாகிவிடுகின்றது.

வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடான கற்பித்தல் கற்றலுக்கு வழி வகுக்குமா?

பெற்றோர்கள் ஆசிரியருக்கு மாற்றீடாக அமைய முடியாது. ஆசிரியராக உள்ள பெற்றோர்களுக்கே வீட்டில் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சவாலான விடயமாக அமையும் போது தகுதியான அனுபவம்மிக்க வளர்ந்தவர்களின் வழிகாட்டல் இன்றி பாடக்குறிப்புக்களினை மட்டும் மையமாக கொண்ட கற்பித்தல் கல்வி ஆகாது.

இங்கு தொழில்நுட்பம் என்பது பிரச்சனைக்குரிய விடயம் அல்ல. அதைக் கற்பிக்கும் இலங்கையின் கல்வி முறைமையே விவாதத்திற்குரிய ஒன்றாகும்.

தற்போது கல்வி முறைமை மாற்றம் சாத்தியமானதா? அவ்வாறெனின் சாத்தியமானது என்ன?

எனவே கொவிட் – 19 எமக்கு கற்பித்த பாடம் நாம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை மாற்றவேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டோம்.

பொதுமைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தினை அணுகுவதற்கான வசதிகளை அனைத்துக் குடிமக்களுக்கும் இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

பரீட்சையினை மையப்படுத்திய கற்பித்தல் முறையில் இருந்து மாற்றமடைந்து மாணவர் மையக் கற்பித்தலுக்கு ஆசிரியர் முன்வர வேண்டும்.

பரீட்சையில் பூச்சிய புள்ளி எடுக்கும் மாணவன் பூச்சிய அறிவுள்ளவனா? எனக் கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பதே ஆகும்.

அவனது திறனை வெளிக் கொணரும் வகையில் குறித்த பரீட்சை அமைய வேண்டும் என்பதே நிதர்சமான உண்மையாகும்.

பூச்சிய புள்ளி எடுத்து கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திய மாணவன் மோட்டார் கார் திருத்துவதில் நிபுணத்துவம் அடைந்திருக்கும் போது கல்வியில் பிரகாசித்து வைத்தியரான சக மாணவன் தனது காரில் ஒரு பிழை ஏற்படும் போது அதனைச் சரி செய்ய முடியாது தனது சக மாணவனான மெக்கானிக்கிடம் செல்கின்றான்.

இலங்கையில் கல்வி: இங்கே கல்வியின் பங்கு என்ன? வைத்தியர் அறிவுள்ளவரா? அல்லது மெக்கானிக் அறிவுள்ளவரா? இங்கே தான் இலங்கையின் கல்வி முறையியும் ஆசிரியரின் பங்கும் கேள்விக்குள்ளாகின்றது.

இலங்கையின் கல்விமுறை மாற்றம் என்பது எமது கையில் இல்லை.

ஆனால் ஒவ்வொரு மாணவனின் திறன்களையும் கண்டறிந்து மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியரால் முடியும்.

எனவே ஒவ்வொரு ஆசிரியரும் எமது எதிர்கால சமூகத்தினை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here