புது வருடம் : பல்வேறு நாடுகளில் புது வருடமானது ஜனவரி – 01 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
ஆனாலும் வரலாறினை நோக்குவோம் ஆயின் இது பழங்காலந்தொட்டு இடம்பெற்ற நிகழ்வல்ல.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
அவ்வாறெனின் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது தான் என்ன? அப்போது வேறு திகதிகளே வருடத்தின் தொடக்கமாக இருந்தது.
உதாரணமாக கூறின் மார்ச் – 25 மற்றும் டிசம்பர் – 25 போன்றவற்றைக் கூறலாம்.
இப்போது உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி தோன்றும். அவ்வாறெனின் எப்போதிலிருந்து ஜனவரி – 1 ஆம் திகதி வருடத்தின் முதலாவது நாளாக வழக்கத்திற்கு வந்தது?
இதற்காக நாம் ரோமானிய மன்னர் நுமா பாம்பிலியஸுக்கு (Numa Pompilius) நாம் ஓரளவு நன்றி சொல்லலாம்.
ஏனெனில், இவரது ஆட்சிக் காலத்தில் (கி.மு. 715-673) நுமா ரோமானிய குடியரசு நாட்காட்டியை திருத்தியுள்ளார்.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019
இவர் பாரம்பரியத்தின் படி, வருடத்தின் முதல் மாதமான மார்ச் மாதத்தை மாற்றி ஜனவரியினை முதல் மாதமாக மாற்றினார்.
இது மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்ததோடு ரோமானிய சமயமான ஜனஸ் (Janus) இனை அடிப்படையாக கொண்டு ஜனவரி எனப் பெயரிடப்பட்டது.
“Januae” எனும் ரோமானியச் சொல்லுக்கு ‘கதவுகள்’ எனப் பொருள்படும்.
அந்த வகையில் ரோமானியக் கடவுள் அனைத்தின் ஆரம்பமாக இருப்பதாக கருத்தில் கொண்டு ஜனவரி என வருடத்தின் முதலாவது மாதம் பெயரிடப்பட்டது.
எது எவ்வாறெனினும் கி.மு 153 வரை ஜனவரி 01 ஆம் திகதி வருடத்தின் முதலாம் திகதியாக அறிவிக்கப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் எவையும் இல்லை.
கி.மு 43 இல் ஜூலியஸ் சீசர் (Julius Caesar) ஜூலியன் நாட்காட்டி (Julian calendar) ஊடாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதன் ஊடாக ஜனவரி – 01 ஆம் திகதி வருடத்தின் முதல் திகதியாக அறிவிக்கப்பட்டது.
ரோமானியப் பேரரசின் விரிவாக்கத்தின் காரணமாக ஜூலியன் நாட்காட்டியின் பயன்பாடும் உலக நாடுகளில் பரவியது.
இருப்பினும் கி.பி 05 ஆம் நூற்றாண்டில் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பல கிறிஸ்தவ நாடுகள் தமது மதத்தின் பிரதிபலிப்பாக இக் காலெண்டரை மாற்றியமைத்தன.
அதன்படி மார்ச் 25 (அறிவிப்பு விருந்து – Feast of the Annunciation) மற்றும் டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ் – Christmas) ஆகியவை புத்தாண்டு நாட்களாக கொண்டாடப்பட்டன.