புதிய தேசிய கல்விக் கொள்கை
புதிதாக உருவாக்கப்படவுள்ள தேசிய கல்விக்கொள்கை தொடர்பிலான ஜனாதிபதியின் முன் மொழிவுகள்:
- அமைச்சர்களின் படங்கள் மற்றும் செய்திகள் பாடசாலைப் பாட புத்தகத்திலிருந்து நீக்குதல்.
- தரம் 05 இற்கு மேற்பட்டவர்களுக்கு கணனிக் கல்வியினை வழங்குதல்.
- பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி முறைமையில் மாற்றம்.
- குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைத்தல்.
- 19 கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழ பீடங்களாக தரம் உயர்த்துதல்.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப ‘அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
முன்பள்ளிகள் முதல் ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி வரை அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அனைத்துப் பரிந்துரைகளும் இக் கொள்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒன்லைன் (Online) மூலமான உயர் கல்வித்துறையை பிரபல்யப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.