தொற்றுநோய் தயார்நிலை தொடர்பான சர்வதேச நாள் – 27.12.2020

0
139

தொற்றுநோய் தயார்நிலை தொடர்பான சர்வதேச நாள் (International Day of Epidemic Preparedness) – 27.12.2020

தற்போதைய கொரோனா வைரஸ் (Covid – 19) போன்ற பாரிய தொற்று நோய்கள் மனித வாழ்வில் பேரழிவு தரக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

அது மட்டுமன்றி சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான நீண்ட காலப் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.

உலகளாவிய சுகாதார நெருக்கடிகள் ஏற்கனவே உள்ள சுகாதார கட்டமைப்புக்களை மூழ்கடித்து, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பொருளாதாரங்களை சீரற்ற முறையில் பேரழிவை ஏற்படுத்துகின்றன.

தற்போதைய உலகளாவிய அவசரத் தேவை என்பது வலுவானதும் நெகிழக்கூடியதுமான சுகாதாரக் கட்டமைப்பு ஆகும். இச் சுகாதாரக் கட்டமைப்பானது பாதிக்கப்படக் கூடியவர்களையும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளவர்களையும் இலகுவில் சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

READ  இலங்கை கல்வி முறைமையில் மாற்றத்தை வலியுறுத்தும் கொவிட் - 19

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019

சர்வதச சமூகமானது இது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதானது எதில்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் அதன் தீவிரத் தன்மை காரணமாக கடந்தகால தொற்று நோய் அலைகளை விட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையலாம்.

தொற்றுநோய் தயார்நிலை :

உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் பயனுள்ள நடவடிக்கைகளாக விழிப்புணர்வுகளினை ஏற்படுத்தல், தகவல் பரிமாற்றம், விஞ்ஞான அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் தரமான கல்வி ஆகியவை தேவை.

அந்தவகையில் 27.12.2020 ஆகிய இன்றைய தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தொற்றுநோய் தயார்நிலை தொடர்பான சர்வதேச தினமாகப் பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here