GSP+ வரிச்சலுகை தொடர்பான கையேடு

1
623
GSP+ வரிச்சலுகை
GSP+ வரிச்சலுகை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பத் தெரிவுகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (GSP) என்பது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது உற்பத்திகளை குறைந்தளவு அல்லது வரிகள் எதுவும் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியளிக்கும் வர்த்தக உடன்படிக்கை ஆகும்.
 
வறுமையை ஒழிப்பதற்கு, ஆட்சிமுறையை மேம்படுத்துவதற்கு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கான செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உதவுவதற்கும் GSP
திட்ட நிகழ்ச்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்றது.
 
விருப்பத் தெரிவுகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் பிளஸ் (GSP+) என்பது ஏற்கனவே GSP இனால் பயன் பெறும் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மேலதிக வர்த்தக ஊக்குவிப்புக்களை வழங்கும் GSP திட்டத்தின் விசேட அம்சமாகும்.
 
GSP+ வரிச்சலுகை திட்டத்தினைவிட பரந்தளவு சந்தை அணுகும் வசதியை வழங்கும் இலக்குடன், 7,200 இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு சலுகைகளற்ற அணுகும் வசதியை பயன்பெறும் நாடுகளுக்கு வழங்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் GSP இனை அறிமுகப்படுத்தியது.
 
இந்த சலுகைகளுக்கு பிரதியீடாக, சலுகையைப் பெறுகின்ற நாடுகள் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் மற்றும் நல்லாட்சி ஆகிய தளங்களில் பிரதான சர்வதேச பிரகடனங்களினை ஏற்புறுதி செய்தல் மற்றும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
 
2014 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட GSP+ ஆனது தற்போது, கடுமையான கண்காணித்தல் பொறியமைப்புக்களையும், அதன் பொருட்டு சிவில் சமூகத்திற்கான முக்கியமான வகிபாகத்தையும் உள்ளடக்கியுள்ளது.
 
இந்த திட்டத்தில் மேலதிகமாக அரசு சாராத செயற்பாட்டாளர்கள் பார்வையாளர்களாக இருத்தலானது கண்காணித்தல் பொறியமைப்பினை மேலும் வெளிப்படையானதாக மற்றும் குறிக்கோள் மிக்கதாக மாற்றுகின்றது.
 
READ  மனித அபிவிருத்தி அறிக்கை - 2018

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here