உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – 2020

0
231
உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு

உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – 2020 (Global Business Summit) ஆனது கடந்த 16.12.2020 அன்று இணையவழி ஊடாக (மெய்நிகர் நேரடி நிகழ்வு) இடம்பெற்றது.

இதனை எஸ்தோனியா (Estonia) மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன் பிரதான நோக்கமாக கொவிட் – 19 நோய்ப் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் மற்றும் வர்த்தகங்கள் ஒன்றிணைந்து சிறந்த டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகும்.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

இதில் பின்வரும் துறைகள் சார்பான டிஜிட்டல் தீர்வகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 • e-Health
 • e-Education
 • e-Governance & Cyber Security
 • Agriculture
 • Smart Cities & Logistics
 • Finance & Manufacturing

கொவிட் – 19 இனை எதிர்கொள்வதற்கான டிஜிட்டல் முறைமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனமானது கடந்த 01.07.2020 அன்று சிங்கப்பூர் மற்றும் எஸ்தோனியா ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டது.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எஸ்தோனிய வெளிநாட்டு அமைச்சர் உர்மாஸ் ரெய்ன்சாலு அவர்களால் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உரை பின்வருமாறு:

உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு: இவ் உரையின் போது பின்வரும் விடயங்கள் இலங்கை சார்பாக அமைச்சரால் முன்வைக்கப்பட்டது.

 • 21 ஆம் நூற்றாண்டு அறிவு மற்றும் புதுமைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அங்கீகரித்து, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அறிவால் இயங்கும் இலங்கைக்கான புதிய தொடக்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்த்தல்.
 • புடாபெஸ்ட் சைபர் குற்ற மாநாட்டிற்கான அரச தரப்பாக மாறிய முதலாவது நாடு இலங்கை ஆகும்.
 • இதுபோன்ற சேவைகள் பயனுள்ளதும், வெளிப்படையானதும், மற்றும் ஊழல் அற்றவையுமாகும் என்பதை உறுதிசெய்கின்ற இலங்கையின் டிஜிட்டல் அரசாங்கக் கட்டமைப்பைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
 • பிரஜைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் ஆட்சியின் மையமான வாழ்க்கை வரலாற்று மற்றும் சுயவிபரத் தரவு தொடர்பான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருதல்.
 • கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு, நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, மோட்டார் போக்குவரத்து, வருமான வரி மற்றும் உள்ளூராட்சித் துறைகளில் இலத்திரனியல் ஆட்சி உட்பட்ட சேவைகள் காணப்படும்.
 • இலத்திரனியல் ஆட்சி, இலத்திரனியல் வணிகம் மற்றும் இலத்திரனியல் மருத்துவம் மற்றும் அத்தகைய டிஜிட்டல் மயமாக்கல்கள் கோவிட்-19 க்குப் பிந்தைய உலகில் உள்ள ‘புதிய இயல்பான’ நிலைமையை வரையறுக்கும்.
 • சைபர் தாக்குதல்கள், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் இதுபோன்ற தீங்கிழைக்கும் செயல்களுக்கு வழிவகுப்பதால், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவருடன் கலந்தாலோசித்து, கட்டாய சைபர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சைபர் பாதுகாப்புக்கான இலங்கை மையம் வெளியிட்டுள்ளது.
 • பொது மற்றும் தனியார் துறைகளில் திறனை வளர்ப்பதற்கும் திறமையான இணையப் பாதுகாப்புப் பணியாளர்களை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, சைபர் பாதுகாப்புக்கான இலங்கை மையம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் ஆகியன சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சைபர் பாதுகாப்புச் சூழல் அமைப்பை தொடர்ந்தும் கண்காணித்து பலப்படுத்தின.

இம் மாநாடு தொடர்பிலான முழுமையான காணொளி பின்வருமாறு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here