காற்றுக்குமிழி: தற்போதைய கொவிட் – 19 பரவலின் தீவிரத்தன்மை காரணமாக சமூகத் தொடர்பாடலுக்கானதொரு முறையாக முன்மொழியப்பட்டுள்ள முறைமையே காற்றுக்குமிழி (Air Bubble) எண்ணக்கருவாகும்.
காற்றுக்குமிழி எண்ணக்கரு என்றால் என்ன?
காற்றுக்குமிழி என்பது தெரிவு செய்யப்பட்ட சில நண்பர்களுக்கிடையே அல்லது தமது குடும்ப நண்பர்களுக்கு இடையே முகக்கவசம் அணியாது சமுகமயமாதலிலை மேற்கொள்ளல் ஆகும்.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
ஆனபோதிலும் இவ் காற்றுக்குமிழி சமுக மயமாதலின் போது இறுக்கமான பொதுவான சில விதிகளை அனைவரும் பேண வேண்டும்.
அவ்வாறு இல்லாது விதிகளை அலட்சியம் செய்யும் போது அது பாரதூரமான விளைவுகளை கொரேனா பரவல் தொடர்பில் ஏற்படுத்தும்.
கடைப்பிடிக்க வேண்டிய இறுக்கமான விதிகள் பின்வருமாறு:
- குறித்த தெரிவு செய்யப்பட்ட காற்றுக்குமிழியிலுள்ள வரையறுக்கப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் தவிர்ந்த ஏனையோருடன் சமூக மயமாதலினை மேற்கொள்ளக் கூடாது. முக்கியமாக முகக் கவசம் இன்றி இச் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- காற்றுக்குமிழி வட்டத்தில் உள்ள ஒருவர் குறித்த காற்றுக்குமிழிக்கு வெளியே சமூக மயமாதலினை மேற்கொண்டால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் கொவிட் – 19 தொடர்பான பரிசோதனையின் பின்னரே அவரை காற்றுக்குமிழியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
- முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி வெளியே செல்லுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
இலங்கையில் கொவிட் – 19 இனை எதிர்கொள்வதற்கு காற்றுக் குமிழிக்கான அவசியமானதா?
தற்போது கொவிட் – 19 இரண்டாம் அலையில் பாரியளவிலான நோய்ப் பரவலை எதிரிகொள்கின்ற இலங்கை மூன்றாம் அலையின் போது இதனை விட பாரிய இழப்பீடுகளை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது.
எனவே காற்றுக்குமிழி எண்ணக்கருவினை இறுக்கமாக பின்பற்றுவதன் மூலம் நோய்ப் பரவலினை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அண்மைய கால இலங்கையின் வெளிநாட்டு முக்கியஸ்தர்களுடனான இலங்கைத் தலைவர்களின் சந்திப்புக்கள் தற்போது இக் காற்றுக்குமிழி எண்ணக்கருவினை இறுக்கமாக பின்பற்றுவதன் ஊடாகவே இடம்பெறுகின்றது.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019
இக் காற்றுக்குமிழி நடைமுறையானது முகக்கவசம் அற்ற வரையறுக்கப்பட்ட சமூக மயமாதலை அனுமதிப்பதன் காரணமாக இக் கொவிட் – 19 பரவலினால் ஏற்படும் மன அழுத்தம் குறைவடைவதுடன் குறிப்பிட்ட காற்றுக்குமிழி வட்டத்தில் உள்ளவர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றும் போது அவர்களது அன்றாட வாழ்வு அமைதியானதாகவும் சந்தோஷம் மிக்கதாகவும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
இதில் உண்மைத்தன்மையும் சக உறுப்பினர் பற்றிய அக்கறையுமே இவ் எண்ணக்கருவுக்கான வெற்றியை தீர்மானிக்கும்.
இவ் எண்ணக்கருவினை குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து கொரோனா பரிசோதனையின் பின்னர் வீதி, கிராமம், பிரதேச செயலக பிரிவு, மாவட்டம், மாகாணம் என விரிவடைந்து செல்ல முடியும்.
தற்போது இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் தெரிவு செய்யபப்பட்ட ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் ஒரு வகையிலான காற்றுக்குமிழி எண்ணக்கருவே ஆகும்.