அரச போட்டிப் பரீட்சைகளும் அரச சேவைகளும் – போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றுவோருக்கான வழிகாட்டி

0
325
அரச போட்டிப் பரீட்சைகள்

 

அரச போட்டிப் பரீட்சை: இன்றைய காலப்பகுதியைப் பொறுத்தவரை இலங்கையில் தொழில்வாய்ப்பு எனும் நோக்கும் போது பலரதும் தெரிவாக காணப்படுவது அரச தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதே ஆகும்.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் அரச துறைசார் ஊழியர்களின் எண்ணிக்கை 1,434,000 ஆகும்.

அரச ஊழியர்களின் பரம்பல் சத விகிதம் (%) ஆனது பின்வருமாறு அரச நிர்வாக பிரிப்புக்களில் காணப்படுகின்றது. அதன் விபரம் பின்வருமாறு:

அரச துறை 52.50%
மாகாண பொதுத்துறை 30.30%
அரசசார் துறை 17.20%
மொத்தம் 100.00%

 

இன்றைய கால இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அரச தொழிலினை விரும்புவதற்கான காரணம் என்னவென நோக்கின் அதற்கான காரணிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

  • அரச தொழிலின் நிலைத்தன்மை
  • ஓய்வின் பின்னரான ஓய்வூதியம் மற்றும் ஓய்வின் போதான கொடுப்பனவுகள்
  • மன அழுத்தம் இன்றிய வேலைச்சூழல்
  • அதிகூடிய விடுமுறைகள் (அமைய லீவு – 21, ஓய்வு அல்லது பிணி லீவு – 24, வார இறுதி விடுமுறைகள், போயா தின மற்றும் அரச விடுமுறைகள்)
  • தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்குரிய கல்வி முறைமை இல்லாமை
  • சுய தொழிலினை மேற்கொள்வதற்கான இடர்பாடுகள் (வங்கி கடன், தொழிலை பதிவு செய்தல், அரச கட்டுப்பாடுகள்)

அந்த வகையில் அரச வேலைவாய்ப்புக்கான அரச போட்டிப் பரீட்சை பிரதானமாக இரு பிரதான பிரிவுகளால் நடாத்தப்படுகின்றன. அவை பின்வருமாறு:

மாகாணசபை (Provincial Council)

மாகாணசபையினால் கோரப்படும் அரச வேலைவாய்ப்புக்களானவை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் போட்டிப்பரீட்சைகள் ஊடாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.

இப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள் மாகாண சேவையினுள் உள்வாங்கப்படுவார்கள்

மத்திய அரசு (Central Government)

மத்திய அரசினால் கோரப்படும் அரச வேலைவாய்ப்புக்களானவை அரச பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் போட்டிப்பரீட்சைகள் ஊடாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.

இப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள் மத்திய சேவையினுள் உள்வாங்கப்படுவார்கள்.

மேலும் அரச ஊழியர்கள் அவர்களது சேவை அதாவது அவர்களது பதவியின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றனர்.

நாடாளாவிய சேவைகள்

இலங்கை நிர்வாக சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை பொறியியல் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை கணக்காளர்கள் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை திட்டமிடல் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை விஞ்ஞான சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை கட்டிட நிர்மாண சேவை மேலதிக விபரங்கள்

 

READ  நிகழ்நிலைப் பரீட்சை - 01

இணைந்த சேவைகள்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மேலதிக விபரங்கள்
மொழிபெயர்ப்பாளர் சேவை மேலதிக விபரங்கள்
நூலகர் சேவை மேலதிக விபரங்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மேலதிக விபரங்கள்
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை மேலதிக விபரங்கள்
சாரதிகள் சேவை மேலதிக விபரங்கள்
அலுவலக ஊழியர் சேவை மேலதிக விபரங்கள்

 

ஏனைய சேவைகள்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மேலதிக விபரங்கள்

 

கல்விசார் சேவைகள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை அதிபர் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை ஆசிரியர் ஆலோசகர்கள் சேவை மேலதிக விபரங்கள்
இலங்கை ஆசிரியர் சேவை மேலதிக விபரங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here