சிறுவர்களுக்கான வாக்களிக்கும் “எங்க வேலை என்னாச்சு” நிகழ்ச்சித்திட்டம்

0
422

அதிவிரைவில் 15.7 மில்லியன் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவுள்ளனர். தமது எதிர்பார்ப்புகளை வலியுறுத்தி தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வர். நியாயமான மற்றும் செழிப்பான எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இந்த தேர்தல் இலங்கைக்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பாகும். இதனை அடைவதற்கு இலங்கையின் ஆறு மில்லியன் சிறுவர்களில் எந்தவொரு சிறுவரும் புறந்தள்ளப்படாது இருப்பதை நாம் உறுதி செய்தல் வேண்டும். இலங்கையானது பல இலட்சக்கணக்கான குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆரம்ப பாடசாலையில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் வருகை உலகளாவிய எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இருந்தபோதும் தமது திறனை வெளிப்படுத்துவதற்கு எமது உதவியை நாடி பல சிறுவர்கள் காத்திருக்கின்றனர். இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிறுவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவதற்கும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இலங்கையின் 06 மில்லியன் சிறுவர்கள் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சக்தியும் பொறுப்பும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கு உள்ளது.

சிறுவர்களை பாதிக்கும் 06 பிரதானமாக விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம். இலங்கையின் எதிர்காலத்திற்காகவும் அதன் எதிர்கால சந்ததியினருக்காகவும் இன்றே செயற்படுவோம்.
 
முழுமையான PDF திட்ட வரைபினை வாசிப்பதற்கு கீழே அழுத்தவும்.
 
 
READ  சுகாதார அமைச்சின் வேலைத்தளங்களில் ஆரோக்கியமான உணவகங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here