சமூக முன்னேற்றச் சுட்டி – 2019

0
202
சமூக முன்னேற்றச் சுட்டி என்பது உலகெங்கிலுமுள்ள சமூக செயல்திறனின் பொருளாதாரமற்ற பரிமாணங்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் செயற்படுத்தக்கூடிய தகவல்கள் தொடர்பில் விரிவாகவும் கட்டமைக்கப்பட்ட வகையில் கவனம் செலுத்தும் அளவீட்டுக் கருவி ஆகும்.
இவ் அறிக்கையானது ஆறாவது வருடத்தில் வெளியிடப்படும் (ஆறாவது) சமூக முன்னேற்ற சுட்டி அறிக்கை ஆகும். ஒட்டுமொத்தமாக நோக்கும் போது சமூக முன்னேற்றம் உலகம் முழுவதிலும் முன்னேறி வருகின்றது.
இவ் முதலாவது அறிக்கை 2014 இல் வெளிவந்தது. 2014 ல் இருந்து 2019 வரையான காலப் பகுதியில் சமூக முன்னேற்ற சுட்டியின் சராசரியானது 62.16 இல் இருந்து 64.47 ஆக அதிகரித்துள்ளது.
இச் சுட்டியில் இலங்கையானது 65 ஆவது இடத்தில் (69.09 புள்ளிகளைப் பெற்று) உள்ளது. அதேநேரம் முதலாவது இடத்தில் நோர்வேயும் (90.95) இறுதியான இடமான 149 ஆவது இடத்தில் தென் சூடான் (24.44) காணப்படுகின்றது.
இச் சுட்டியில் இந்தியா (59.10) 102 ஆவது இடத்தில் உள்ளது.
முழுமையான அறிக்கையினை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
READ  அதிக இணைப்புக்களை கொண்ட நகரங்களின் தரவரிசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here