கோடை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் – 2020 (Summer Olympics – 2020) 32 ஆவது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXII Olympiad) என்பது ஜப்பானின் டோக்கியோ நகரில் 24.07.2020 தொடக்கம் 09.08.2020 வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
2013 செப்டம்பர் 7 இல் புவனெசு ஐரிசு – அர்ஜென்டினா (Buenos Aires) நகரில் இடம்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 125 ஆவது அமர்வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்த டோக்கியோ தெரிவு செய்யப்பட்டது.
டோக்கியோ ஏற்கனவே 1964 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருந்தது. 2019 – 2020 கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 23.07.2021 தொடக்கம் 08.08.2021 வரை இடம்பெறவுள்ளது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் தீபமானது ஜப்பானிய கலாச்சாரத்தின் பல கூறுகளை உள்ளடக்கியது.
மேலும் டோக்கியோ 2020 இன் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டத் தொனிப்பொருளாக: ‘நம்பிக்கை எங்கள் வழியை விளக்குகிறது – Hope lights our way’ என்பதாக அமைந்தது.
கோடை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்: இது ஜப்பானின் புகழ்பெற்ற சின்னங்களின் ஒன்றான செர்ரி மலரை ஒத்ததாகவும், மழை மற்றும் 38 மைல் வேகத்தில் காற்று வீசினால் சுடரின் ஜோதியை அணையாமல் உள்ளபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளின் டோக்கியோ ஒருங்கிணைப்புக் குழுவானது ‘உணர்ச்சிகளின் மூலம் ஒருங்கிணைதல்’ என்ற ஒரு அதிகாரப்பூர்வ குறிக்கோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
இது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக ‘உலகளாவிய மதிப்புகள்’ மற்றும் ‘விளையாட்டின் சக்தியை ஒருங்கிணைத்தல்’ ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
கோடை ஒலிம்பிக் விளையாட்டு: பேஸ்பால் ஃ சாப்ட்பால், கராத்தே, ஸ்கேட்போர்டிங், விளையாட்டு ஏறுதல் மற்றும் சர்ஃபிங் ஆகிய புதிதாக 05 விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.