துரித அபிவிருத்தி முயற்சியில் முதலீட்டு உபாயத்திற்கு அமைவாக அதிகளவிலான கருத்திட்டங்களும் நிகழ்ச்சித்திட்டங்களும் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட பயன்களை உரிய நேரத்திலும் உரிய கிரயத்திலும் அமுல்படுத்தப்படுவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக, கருத்திட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்படுகின்ற தடைகளை அகற்றுவது தொடர்பாக உரிய நேரத்தில் தர்க்கரீதியான மற்றும் தகவல் அறிந்த தீர்மானமெடுப்பதற்கு ஏற்றவாறு முன்னேற்றங்களை அறிக்கையிடுவதன் ஊடாக வசதியேற்படுத்தி கொடுத்தல் அவசியமாகின்றது. இதற்கமையஇ பொது நிதியியல் முகாமைத்துவத்தில் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுவதுடன் முதலீடுகள் வினைத்திறனுடனும் பயனுறுதிமிக்க முறையிலும் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்கின்றது. இதனால்இ இவ் இலக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் அடைந்துகொள்வதற்குரிய பொருத்தமான வழிகாட்டுதல்கள் மற்றும் வசதிகளை கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களம் ஏற்படுத்திக் கொடுத்துவருகின்றது.
அந்த வகையில், முழுமையான நிதி அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை – 2018 இனைப் பெற கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
