உலகளாவிய கண்டுபிடிப்புச் சுட்டியானது உலகிலுள்ள 129 நாடுகளின் கண்டுபிடிப்புச் செயல்திறன்களை தரவரிசைப் படுத்துகின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தரவரிசைச் சுட்டியானது ‘ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குதல் – மருத்துவ கண்டுபிடிப்புக்களின் எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது அடுத்த தசாப்தத்தின் மருத்துவ கண்டுபிடிப்புக்களின் பரப்பினை ஆய்வு செய்கின்றது. தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமல்லாத மருத்துவக் கண்டுபிடிப்புக்கள் உலகளாவிய சுகாதார சேவைகளின் விநியோகத்தினை எவ்வாறு மாற்றும்? என ஆய்வு செய்கின்றது.
இலங்கை தொடர்பான விடயங்கள்:
இச் சுட்டியில் இலங்கையானது கீழ் – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்ப்பு கோட்டிற்கு அருகாமையில் உள்ள நாடாக காணப்படுகின்றது. கீழ் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இந்தியா எதிர்பார்ப்பிற்கு மேலே உள்ள நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றுக்கொண்ட இடம் | நாடு | வருமான மட்டம் |
முதலாவது (01) | சுவிஸ்லாந்து | உயர் வருமானம் பெறும் நாடு |
எண்பத்தொன்பதாவது (89) | இலங்கை | கீழ் நடுத்தர வருமானம் பெறும் நாடு |
இறுதி (129) | ஜேமன் (Yeman) | கீழ் வருமானம் பெறும் நாடு |
மேலும் இலங்கை கீழ் – நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வரிசையில் 12 ஆவதாகவும் மத்திய மற்றும் தென்னாசிய நாடுகளின் தரவரிசையில் 04 ஆவதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான அறிக்கையினை வாசிப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.