இலங்கை மற்றும் ரூமேனியா ஒத்துழைப்பு

0
201
இலங்கை மற்றும் ரூமேனியா: இலங்கை மற்றும் ருமேனியா (Romania) பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படவுள்ளன.

கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இரு நாடுகளுக்குமிடையில் கடந்த 16.12.2020 அன்று இடம்பெற்ற இணையவழி ஊடான வெளியுறவு அலுவலக ஆலோசனையின் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

  • எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் ரூமேனியாவில் இலங்கை தூதரகம் ஒன்றினைத் திறத்தல்.
  • பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படல்.

இலங்கை மற்றும் ரூமேனியா: இதற்காக இலங்கையருக்கான ரூமேனியாவில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் இலங்கையருக்கான வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்காக டிசம்பர் 2020 இல் மட்டும் 1500 புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான அனுமதி இலங்கையருக்கு வழங்கப்பட்டுள்ளது.

READ  தொற்றா நோயாளிகளில் கொவிட் - 19

மேலும் ருமேனியாவில் தற்போது 8,000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் முக்கியமாக ஆடை, விருந்தோம்பல் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவதுடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளில் திறமையான வேலைவாய்ப்புக்கள் திறக்கப்படுகின்றன.

Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி 10 வசதியை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், மத்திய ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பரந்த சந்தைகளை முறையே அணுகுவதற்குமாக இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பதவிநிலைகளை புத்துயிர் பெறச் செய்து விரிவாக்குவதற்கும் இரு தரப்பினரும் இதன் போது ஒப்புக்கொண்டனர்.

இலங்கையின் ரூமேனியா தூதரகமானது கொழும்பு 07 இல் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here