இலங்கையில் சமூகவலைத்தள பயனர்களை பதிவு செய்ய விசேட திட்டம்:
நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறிப்பாக இது வெளிநாடுகளில் இருந்து கொண்டு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துபவர்களை பதிவு செய்வதனை நோக்கமாக கொண்டுள்ளது.
இவ்வாறனவர்கள் காரணமாக அதிகம் நடுத்தர வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதுடன் எமது நாட்டிலுள்ள பெருளவிலான பணமும் வெளிநாடுகளுக்கு செல்கின்றது.
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
இலங்கையில் இணையக் குற்றத் தடுப்பு தொடர்பில் அரச நிறுவனம் National Centre for Cyber Security ஆகும். இது 2006 இல் ஆரம்பிக்கப் பட்டது. அத்துடன் இது கடந்த ஆகஸ்ட் 2018 இல் Private Limited Liability Company ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.
நவம்பர் – 2019 தொடக்கம் நவம்பர் – 2020 வரையிலான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் எனப்படும் Social Media வினைப் பயன்படுத்தியோர் சதவிகிதம் பின்வருமாறு:
Read More: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019
Name of the Social Media use in Sri Lanka | Percentage % |
61.29% | |
YouTube | 16.93% |
13.75% | |
6.57% | |
0.73% | |
0.31% |
தற்போது இலங்கையில் கொவிட் – 19 பாதிப்பினைத் தொடர்ந்து பல்வேறு தொலைபேசி அமைப்புக்களும் பல்வேறுபட்ட இணையப்பாவனை தொடர்பான சலுகைகளை வழங்கி வருகின்றன.
அவற்றில் சமூக வலைத்தளங்களுக்கான வரையறையற்ற இணையப்பாவனை மற்றும் கற்றல் கற்பித்தலுக்கான இணையப்பாவனைக்கான வரையறையற்ற இணையப்பாவனை என்பன மக்களுக்கு பயன்மிக்கதாகவும் அதே வேளை டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான பல்வேறுபட்ட வாய்ப்புக்களையும் மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைகின்றது.