அமெரிக்கத் தேர்தல் 2020

1
315
 • அமெரிக்காவின் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 59வது அதிபர் தேர்தலானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று நடைபெற்றது.
 • ஜோ பிடன் 290 வாக்குகளை வென்று அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றி உள்ளார்.
 • இவர் அமெரிக்காவின் 46வது அதிபராவார்.
 • இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் பதவியேற்பார்.
 • இவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று பதவியேற்க உள்ளார்.
 • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்பை வீழ்த்தி அதிபர் பதவியைக் கைப்பற்றி உள்ளார்.
 • இந்தத் தேர்தல் முடிவு, 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர்  டொனால்ட் டிரம்பை ஒரு முறை மட்டுமே பதவி வகித்த அதிபராக மாற்றியுள்ளது.
 • ஜோ பிடன் (78) அமெரிக்காவின் மிக வயதான அதிபராவார்.
 • ஜோ பிடன் அமெரிக்காவின் 47வது துணை அதிபராக 2009 முதல் 2017 வரை பணியாற்றினார்.
 • ஒபாமாவும் பிடனும் முதலில் 2008 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பின்னர் 2012 ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 • துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸைத் தோற்கடித்து உள்ளார்.
 • அமெரிக்காவில் முதல் பெண், முதல் அமெரிக்க இந்திய நபர் மற்றும் முதல் கறுப்பினப் பெண் அமெரிக்காவின் துணை அதிபர் ஆனவர் என்ற பெருமையை இவர் பெறுவார்.
 • அவரது தாயார் தமிழ்நாட்டில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள துளசேந்திரபுரம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்த ஓர் இந்திய அமெரிக்கராவார்.

தேர்தல் முறை

 • அமெரிக்க அரசியலமைப்பானது அதன் அதிபரை இரண்டு முறையிலான பதவிக் காலத்திற்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க அனுமதிக்காது.
 • நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாத இந்தத் தேர்தலில், ஐம்பது அமெரிக்க மாநிலங்கள் அல்லது வாஷிங்டன் டி.சியில் பதிவு செய்துள்ள அமெரிக்கக் குடிமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வர்.
 • இவர்கள் நேரடியாக அதிபருக்கு அல்லாமல், மாறாக தேர்வுக் குழுவிற்கு (electoral college) வாக்களிப்பார்கள்.
 • இந்த வாக்காளர்கள் பின்னர் தேர்தல் வாக்குகள் என அழைக்கப்படும் நேரடி வாக்குகளை அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு அளிப்பார்கள்.
 • தேர்தல் வாக்குகளின் முழுமையான பெரும்பான்மையைப் பெறும் வேட்பாளர் (538 இல் குறைந்தது 270), அந்த அதிபர் பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
 • அமெரிக்காவில், தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அரசுச்  செயலாளரிடம் (secretary of state) உள்ளது.
 • சில மாநிலங்களில் அரசுச் செயலாளர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். மற்றவற்றில் அவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் தேர்தலில் மின்னணு முறைகளை அனுமதிக்கின்றன.
 • இருப்பினும், காகித வாக்குச் சீட்டுகள் நாடு முழுவதும் வழக்கமாக உள்ளன.
 • அமெரிக்காவின் மூன்று தேர்தல்களும், அதாவது மத்திய அரசு, உள்ளாட்சி மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றுக்கு அந்தந்த மாநிலத்தின் அரசாங்கத்தால் நேரடியாக ஏற்பாடு செய்யப் படுகின்றன.
 • இதில் வாக்குகளை எண்ணுவதற்கு முன் செயலாக்கம் என்று ஒரு நிலை உள்ளது.
 • இந்தச் செயலாக்கத்தில் ஆவணங்களை சரி பார்த்தல், கையொப்பங்களை சரி பார்த்தல், வாக்குச் சீட்டுகளை சரி பார்த்தல் ஆகியவை அடங்கும்.
 • பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
 • அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுவது இல்லை.
 • அதற்குப் பதிலாக, அவர்கள் “தேர்வுக் குழு” என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையின் மூலம் “வாக்காளர்களால்” தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
 • அதிபர் வேட்பாளர் என்பவர்,
 • அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும்.
 • 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 • குறைந்தது 35 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
 • ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

அமெரிக்க தேர்வுக் குழு அமைப்பு

 • அமெரிக்கா தனது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேர்வுக் குழு முறையைப் பயன்படுத்துகிறது.
 • அமெரிக்கத் தேர்வுக் குழு முறையின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட  வாக்குகள் வழங்கப் படுகின்றன.
 • ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களைப் பெறுகிறது.
 • ஒவ்வொரு வாக்காளரும் பொதுத் தேர்தலில் ஒரு தேர்தல் வாக்கினை அளிப்பர்.
 • ஒட்டு மொத்தமாக, மொத்தம் 538 தேர்தல் குழு வாக்குகள் உள்ளன.
 • எனவே, ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகளை அடைய வேண்டும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here