அதிக இணைப்புக்களை கொண்ட நகரங்களின் தரவரிசை

0
285
அதிக இணைப்புக்களை கொண்ட

அதிக இணைப்புக்களை கொண்ட நகரங்களின் தரவரிசை:

கடந்த 25.11.2020 அன்று சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து கூட்டமைப்பானது  (The International Air Transport Association – IATA) ‘சர்வதேச விமான இணைப்பு நெருக்கடியானது’ எவ்வாறு சர்வதேச பொருளாதார மீட்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றது (International Air Connectivity Crisis Threatens Global Economic Recovery) எனும் அறிக்கையினை வெளியிட்டது.

அதாவது கொரோனா வைரஸ் (COVID 19) காரணமாக சர்வதேச இணைப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச ரீதியிலான அதிகம் இணைப்புக்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசையில் இது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலண்டன் நகரமானது செப்டெம்பர் – 2019 இல் அதிக இணைப்பினைக் கொண்ட நகரமாக காணப்பட்டது. இது 67 சரிவடைந்து செப்டெம்பர் – 2020 இல் 08 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

சீனாவின் சாங்காய் நகரமானது அதிகம் இணைப்புக்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசையில் உள்ளது. அதுமட்டுமன்றி முதல் நான்கு இடங்களிலும் சீனாவின் நகரங்களே இடம்பெற்றுள்ளன.

அதிக இணைப்புக்களை கொண்ட நகரங்களின் தரவரிசை இனைப் பொறுத்தவரை நியூயோர்க், டோக்கியோ, பாங்கொக், கொங்கொங் மற்றும் சியோல் ஆகிய நகரங்கள் செப்டெம்பர் – 2019 இல் முதல் 10 இடங்களுக்குள் இருந்த போதிலும் செப்டெம்பர் – 2020 இல் இவை முதல் 10 இடங்களுக்குள் தரவரிசைப்படுத்தப்படவில்லை.

READ  உலகளாவிய இராஜதந்திரக் சுட்டெண் - 2019

அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட நகரங்கள் இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அத்துடன் சர்வதேச இணைப்பு எந்த அளவிற்கு முடக்கப்பட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.

தரப்படுத்தல் செப்டெம்பர் – 2019 செப்டெம்பர் – 2020
1 லண்டன் (London) சாங்காய் (Shanghai)
2 சாங்காய் (Shanghai) பெய்ஜிங் (Beijing)
3 நியூயார்க் (New York) குவாங்சௌ (Guangzhou)
4 பெய்ஜிங் (Beijing) செங்டூ (Chengdu)
5 டோக்கியோ (Tokyo) சிகாகோ (Chicago)
6 லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) சென்சென் (Shenzhen)
7 பாங்காக் (Bangkok) லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles)
8 ஹாங்காங் (Hong Kong) லண்டன் (London)
9 சியோல் (Seoul) டல்லாஸ் (Dallas)
10 சிகாகோ (Chicago) அட்லாண்டா (Atlanta)

 

மேலும் அறிந்து கொள்ள: அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here